பொதுத் தேர்தல் தொடர்பாக 900இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை அதிகரிப்பு கஃபே
சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை அதிகரிப்பு கஃபே

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் இதனைத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 920 முறைப்பாடுகள் கஃபே அமைப்புக்கு பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 142 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைத் தொடர்பாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் வெறுப்பூட்டும் பிரசாரங்கள் மற்றும் பொய்யான பிரசாரங்களை மக்கள் மயப்படுத்துவது தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.