30 ஆயிரம் PCR பரிசோதனைகளை மாதாந்தம் மேற்கொள்ள திட்டம்!

1588663756
1588663756

கொரோனா தொற்றாளர்களை விரைவில் கண்டறியும் நோக்கில் மாதாந்தம் 30 ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் காரணமாக ஒருவர் உயிரிழக்கும் நிலையில் அவருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கியல் ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறிதது ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் இலங்கையில் உள்ள தொற்றாளர்களுக்கு செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து 16 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,638 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.