10 ஆயிரம் ரூபா கையூட்டு வாங்கிய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி கைது!

arest 1
arest 1

நபரொருவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபா கையூட்டு வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் மாவனல்லை-தெவனகல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரி போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதை தடுக்கவும், சந்தேக நபரின் சேமிப்பக அட்டையை திருப்பி வழங்குவதற்காகவும் இவ்வாறு கையூட்டு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.