அங்கொட லொக்காவின் சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்: ஜாலிய சேனாரத்ன!

police 4
police 4

இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் அங்கொட லொக்காவின் சொத்துக்களை அரசுடமையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்காவின் குழுவினருக்கு மேல் மாகாணத்தில் மாத்திரம் 928 பேர்ச்சஸ் காணி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பலாத்காரமாகவும் போலி உறுதிகளை பயன்படுத்தியும் குறித்த காணிகள் கைப்பற்றப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கொட லொக்கா சட்டவிரோத செயற்பாடுகள் ஊடாக சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்கொட லொக்காவின் குழுவினர்களால் பொதுமக்களின் காணிகள் பலத்காரமாகவோ, போலி உறுதிகளைப் பயன்படுத்தியோ கைப்பற்றப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதற்கென 071 85 922 79 எனும் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.