தமது பிரதான சேவை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே!

625.500.560.350.160.300.053.800.900.160.90 17
625.500.560.350.160.300.053.800.900.160.90 17

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது பிரதான சேவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கூறியுள்ளார்.

அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு அரசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல் மற்றம் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையிலுல் தென்னிலங்கை கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக செயலாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.