நாடு பின்னடைய காரணம் முன்னர் பின்பற்றப்பட்ட அரசியல் கலாசாரமே:எம்.பி டலஸ் அழகப்பெரும!

NW08
NW08

“நாட்டில் இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட அரசியல் கலாசாரமே நாடு பின்னடைவை சந்தித்திருக்கின்றமைக்கான காரணமாகும். நாம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்” என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மின் சக்தி அமைச்சராக இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைக் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“இது வரையில் அரசியல்வாதிகளே எமக்கு தலைவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் தற்போதுள்ள ஜனாதிபதி முன்னாள் அரசியல்வாதியல்ல. ஆனால் அவர் தொழிநுட்பத்தில் சிறந்த நிபுணராவார். நாட்டின் முன்னேற்றத்தில் மின்சக்தி அமைச்சு மிக முக்கிய இடம் வகிக்கிறது என்று ஜனாதிபதி நம்புகின்றார்.

ஜனாதிபதி மீது அதிகளவான நம்பிக்கை வைத்தே மக்கள் அவருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை ஸ்திரப்படுத்துவதற்காகவே மிக முக்கிய அமைச்சினை ஜனாதிபதி எம்மிடம் கையளித்துள்ளார்.

எமது நாட்டில் இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட அரசியல் கலாசாரமே நாடு பின்னடைவை சந்தித்திருக்கின்றமைக்கான காரணமாகும். நாம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். தற்போது மின்சாரசபைக்கு 250 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாம் அதனை ஈடுசெய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.