சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மீட்பு

1597339959 yellow 2

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிற்குள் வருவதையும், கடல் வழியாக பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படுவதையும் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு ரோந்துப் பணியின் போது, கடற்கரைக்கு அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சாக்குகள் பரிசோதனை செய்த போது 57.2 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடற்படை, முந்தைய சந்தர்ப்பத்திலும் இந்த பகுதியில் கடல் வழியாக கடத்தப்பட்டதாக நம்பப்படும் 999 கிலோ மற்றும் 500 கிராம் மஞ்சள் பறிமுதல் செய்ததுடன் இன்று கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகளும் இதேபோன்ற குறிப்பில் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடற்படை கைப்பற்றிய மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.