இன்று முதல் மீண்டும் லங்காபுர பிரதேச செயலகம் திறக்கப்படவுள்ளன..

lankapura

கொவிட்- தொற்றுறுதியான இரண்டு பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து மூடப்பட்ட லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அந்த பிரதேச சபை என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த காரியாலயங்களில் பணியாற்றிய பணிக்குழாமினர் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க முடியும் என லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை 30 மற்றும் ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயத்தின் உதவியாளர் மற்றும் சிவில் பாதுகாப்பு சிப்பாய்க்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதனையடுத்து, லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அந்த பிரதேச சபையை மூடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் மேற்கொண்டனர்.

அத்துடன் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 891 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் தொடர்ந்தும் 30 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.