தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்றுடன் நிறைவு

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 5

தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சி இதுவரை தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளிக்கவில்லை.

குறித்த இரண்டு கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் குறித்த இரண்டு கட்சிகளும் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் முன்கொண்டு நடாத்திச் செல்லப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் சடடத்தரணி நிமல்.பி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் 07 அரசியல் கட்சிகளுக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி,ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்துள்ளன.

அவற்றில் 19 பேரின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.