சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அவதூறுகளிற்கு நீதிமன்றம் செல்வேன்-ஹக்கீம்!!

அவதூறுகளிற்கு நீதிமன்றம் செல்வேன்-ஹக்கீம்!!

தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று தனக்கெதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆதாரமற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்து பரப்பினால், அந்த ஊடகத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வேன் என எச்சரித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (Nov.07) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்வில் தெரிவிக்கையில்;

தனக்கெதிராக செயற்படுவோருக்கும் ஊடகங்கள் துணைபோவதும் விரும்பதகாத செயலாகுமென தெரிவித்துள்ள அமைச்சர் என்மீது தொடர்ந்தும் வீண்பழி சுமத்துவதை தவிர்க்க வேண்டுமெனவும், முடியாத கட்டத்தில் தான் சட்ட ரீதியாக அனுகவேண்டிவருமெனவும் தெரிவித்தார்.

தான், வைத்தியசாலையொன்றுக்கு தெரிந்த நபரொருவரைப் பார்க்கச் சென்ற விடயத்தையும் பூதாகரமாகச் சித்தரிக்கும் இச்செயற்பாட்டையும் இவ்விடத்தில் கண்டிக்கின்றேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது ...