சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கோத்தாபயவின் வெற்றி உறுதி- வரதராஜபெருமாள் !

கோத்தாபயவின் வெற்றி உறுதி- வரதராஜபெருமாள் !

நடைபெறவுள்ள இனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் அவர் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெற விரும்பவில்லை எனவும் குறித்த வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என கோத்தாபய ராஜபக்‌ஷ எதிர்பார்ப்பதாக இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன முன்னணியின் இணைந்த அலுவலகத்தில் இன்று (Nov.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறுித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

கோத்தாபயவின் வெற்றி 75 சதவிகித பெரும்பான்மை மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் சுய நிர்ணயம், சமஷ்டி உள்ளிட்ட எந்த விடயங்களிலும் கூட்டமைப்புக்கு அக்கறை கிடையாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் இலஞ்சம் கொடுத்து கூட்டமைப்பை விலை பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே சஜித் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. காரணம் அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட அட்டூழியங்களே இவர் ஆட்சிக்கு வந்தால் தொடரும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட ...