சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / காணாமல் போன கிழக்குப் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!

காணாமல் போன கிழக்குப் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினைச் சேர்ந்த காணாமல் போன அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் எனும் மாணவனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

காணாமல்போன மாணவன் நேற்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரண்டெடுக்கப்பட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட ...