சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / 18 பேருக்கும் கொரோனா இல்லை!

18 பேருக்கும் கொரோனா இல்லை!

யாழ்ப்பாணம் – தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் தாவடியில் வசிக்கும் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

அவர்களில் 18 பேரின் மாதிரிகளே கொரோனா தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனைக்கு நேற்று முன்தினம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தற்போது அறிக்கை கிடைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு காணொலி மூலம் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய ...