அம்புலன்ஸ் சாரதி மறுப்பு: அராலியில் இளைஞன் சாவு!

8 n
8 n


பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது.


அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கேற்ற வசதியை பொது சுகாதார பரிசோதகர் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று அப்பிரதேச இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


அதேநேரம், கொறோனா அனர்த்த ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள நிலையில், பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி வரமுடியாது என்று அம்புலன்ஸ் சாரதியும் மறுத்துவிட்டார் என அவர்கள் கூறுகின்றனர்.


குறித்த இளைஞரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலையில் சேர்க்காமையினாலேயே இந்த மரணம் சம்பவித்தது என்று வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.


இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், தாயார் ஒரு சிறுநீரகம் வழங்கித் தன் மகனுக்கு இரண்டாவது தடவையாகவும் உயிர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது