பலத்த காற்றினால் உப பொலிஸ் நிலையம் சேதம்

IMG 9067
IMG 9067

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ் நிலையம் மீது பாரிய மா மரம் விழுந்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்,

இதேபோன்று வீட்டுக் கூரையின் மேல் தென்னைமரம் விழுந்ததில் வீட்டின் ஓடுகள் வீட்டில் போடப்பட்டிருந்த மரங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் பகுதியில் துரதிருஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வட்டக்கச்சி இராமநாதபுரம் உப பொலிஸ் நிலையம் மீது மாமரம் முறிந்து வீழ்ந்தமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டக்கச்சி இராமநாதபுரம் உப பொலி ஸ் நிலையம் மீது மாமரம் முறிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது .