சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / முகமாலையில் மனித எச்சங்கள் புலிகளின் சீருடைகள் மீட்பு!

முகமாலையில் மனித எச்சங்கள் புலிகளின் சீருடைகள் மீட்பு!

கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளுடன் மனித எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கண்ணிவெடியற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களால் இன்று காலை எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

எலும்பு எச்சங்களுடன் விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி முகமாலை போர் பிரதேசத்தின் முன்னரங்க பகுதி எனக் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

x

Check Also

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் ...