சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / பாண்டியன்தாழ்வு பகுதியில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

பாண்டியன்தாழ்வு பகுதியில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் குழு ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று இரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாத கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது – 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றயவர் முச்சக்கர வண்டிச் சாரதி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களையும் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

x

Check Also

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் ...