சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!
corona agencies
corona agencies

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் கடற்படையினர் எனவும், ஒருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும், 04 பேர் பங்களாதேஷிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும், ஒருவர் பெலாருஸிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும், 02 பேர் இராணுவத்தைச் சேர்ந்த தொற்றாளரின் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் தற்போது 821 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 811 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் நோய் சந்தேகத்தில் 65 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...