சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / சூடுபிடிக்கும் பொதுத் தேர்தல் – வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்
2019 10 07T134521Z 1 LYNXMPEF960V6 RTROPTP 4 SRI LANKA ELECTION

சூடுபிடிக்கும் பொதுத் தேர்தல் – வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார்.

அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சாவகச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம், தாவடி வேலுவிநாயகர் விளையாட்டுக் கழகம் ஆகிய இடங்களில் அவர் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார்.

இதேநேரம் நாளை வட்டுக்கோட்டை வழக்கம்பரை அம்மன் கல்யாண மண்டபத்தில் இரண்டாம் நாள்  பிரசாரத்தை ஆரம்பிக்கும் சஜித், அதனைத் தொடர்ந்து மானிப்பாய் பிரதேச சபை மண்டபம், சாவற்காடு மகாத்மா சனசமூக நிலையம் காங்கேசன் துறை இராஜேஸ்வரி மண்டபம், உடுப்பிட்டி சித்திவிநாயகர் கல்யாணமண்டபம், இராஜ கிராமம், நெல்லியடி பருத்தித்துறை, ஊர் காவற்றுறை அனுசா கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

அதேவேளை, நாளை மறுதினம் 3ஆம் திகதி கிளிநொச்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார்.

x

Check Also

sri

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு! 12 மாதம் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு?

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் ...