காட்டூனில் வருவது போன்ற மகிந்தவின் கிழட்டு புலி கருணா – கே.எம்.அப்துல் றஸாக்

IMG 20200701 193644 1
IMG 20200701 193644 1

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய  முஸ்லிம் கட்சிகளுக்கு போட்டியிடுகின்ற  வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை. அவரும் கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற  ஒருவர்.எனவே  அவரை ஒதுக்கி விட வேண்டும் என கிழக்கு  மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான   கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல்  போட்டியிடுகின்ற அவர்  கல்முனையில் அமைந்துள்ள  தனது அலுவலகத்தில் புதன்கிழமை(1) இரவு நடைபெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும்  அவர் தெரிவித்ததாவது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தம்பி ஹரிஸ் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை அவர் எடுக்கும் சில விடயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகவே  இருக்கும் இம்முறை கல்முனைக்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் தேவை. அந்த உறுப்பினர் இந்த பிரதேசத்தில்  ஆச்சரியத்தை அளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பவராக  இருக்க வேண்டும். கல்முனை  தலைநகராக  மாற்றியமைப்பது நமக்குத் தேவை. இப் பிரதேசத்தில் இன ஐக்கியத்தை  கட்டியெழுப்ப  வேண்டிய பாராளுமன்ற பிரதிநிதியை நாம் அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கின்றது.

அம்பாறையில் தேர்தலில் வேட்பாளராக இறங்கியுள்ள கருணா அம்மானை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.அவர் காட்டூனில் வந்தது போல பிரதமர்  மகிந்த ராஜபக்சவின் கிழட்டு புலி இவரை பற்றி கவலைப்பட தேவையில்லை.

கருணாவினால் வந்துள்ள   உயிர் அச்சுறுத்தல் குறித்து  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த விடையத்தை பார்த்தால் அவர் இன்னும் சிறுபிள்ளை போல்தான் தெரிகிறது.
அவர்களை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை  கருணாவின் அரசியல் கால இன மாச்சரிய நடவடிக்கைகள் என்னை பொறுத்தளவில் அது ஒரு பெரிய விடயமாக இருக்காது.

கருணாவை  பொறுத்தவரையில் அவரை எந்த அளவிற்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது.  தமிழ் பாடசாலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி கற்றவன்  என்றவகையில் கருணா அம்மானை  ஏற்றுக்கொண்டவர்கள் அரிதானவர்கள். அந்த அடிப்படையில் கருணா அம்மான் மீது ஹரீஸ் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

வழமையாக ஹென்றி மகேந்திரன் ,ஹீரீஸ், கோடீஸ்வரன் இவர்கள் மூவரும் தனியே திட்டமிட்டு முஸ்லிம் சார்ந்த இன ரீதியான விடையங்களையும் பொய் வதந்திகளையும் அவர்கள் கூறுவார்கள். முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை இவர்கள் சொல்லிக் கொள்வது போல அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இது வழமையான அரசியல் சித்தாட்டம் இதைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லை.

இம்முறை அம்பாறையில் நான்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. அம்பாறை என்ற தொகுதிக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தான் வர வேண்டும். ஏனைய பொத்துவில் சம்மாந்துறை கல்முனை தொகுதிகளுக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

முஸ்லீம்களை பொறுத்தளவில் ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தது. நாங்கள் கேட்டு கொண்டதிற்கிணங்க இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து போட்டியிட்டிருந்தால் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீம்கள் சார்பாக பெற்றிருக்க முடியும்.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆறு உறுப்பினர்களை களமிறக்கி இருக்கிறார்கள் இவர்கள் எவரும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இதில் ஒரு உறுப்பினர் 40 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சிங்கள உறுப்பினர் பெறும் வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்றால் மாத்திரமே ஒரு முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பிரதிநிதியை வெல்ல முடியும்.

கடந்த காலங்களில் விளையாட்டு துறை பிரதியமைச்சராக இருந்தும் ஒரு மைதானத்தை கட்ட முடியாதவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ். இவர்  உள்ளுராட்சி அமைச்சை வைத்திருந்து கல்முனை பிரச்சனை தீர்க்க முடியாதவர். வங்கி கட்டிடம் ஒன்றை கட்ட முடியாதவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டுமா  அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமா என மக்கள் தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் மூன்று ஆண்டுக்களுக்குள் கல்முனை பிரச்சினையை தீர்த்து வைப்பேன்.

முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்ற இரு கட்சிகளுக்கு போடும் வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை . கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற அவரை ஒதுக்கி விட வேண்டும் என்றார்.