தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் சுமார் 800 பேர் இருப்பதாகவும் அவர்களில் 50 வீதமானர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.