வடக்கின் பல்வேறு நீர் நிலைகளிலும் கொடுவா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன

Naq2 720x450 1
Naq2 720x450 1

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டம் வட பகுதியில்  மேற்கொள்ளபடுகிறது. அதற்கமைய  பெருந்தொகையான கொடுவா மீன் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  நாடளாவிய ரீதியில் காணப்படும் நன்னீர் மற்றும் பருவ கால நீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்திகான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் நாடளாவிய ரீதியல் பல்வேறு நீர் நிலைகளில் இறால் மற்றும் மீன் குஞ்சுகள் இடப்பட்டு அவை பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் நேற்று தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், வடக்கின் பல்வேறு நீர் நிலைகளிலும் கொடுவா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டதக்கது