மொரட்டுவ பல்கலைக்கழக எஞ்சினியர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான ஓட்சிசன் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

IMG 3808
IMG 3808

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன்
உபகரணங்களை அன்பளிப்பாக நேற்று சனிக்கிழமை (12) எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்.

IMG 3816

கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்ரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உகரணத்தை வழங்க தீர்மானித்தனர்.

IMG 3820 1

இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த ஓட்சிசன் உபரணங்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம் ஓப்படைத்தனர்.