இலங்கையில் முதலாவது இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வடிவ தொற்றாளர்!

3d microscopic photo covid 19 coronavirus 149660 462
3d microscopic photo covid 19 coronavirus 149660 462

இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வடிவம் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரொருவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்ட 51 ஆவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இந்த வைரஸ் பி117 (B117) என அழைக்கப்படுகிறது.

இலங்கையில் இனங்காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றாளர் தற்போது இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தினை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கடந்த 4 ஆம் திகதி உறுதிப்படுத்துப்பட்டமை குறிப்பிடத்தக்கது.