உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்!

3d8eb6dd 79dc 420d ad55 ee58cd23eb18
3d8eb6dd 79dc 420d ad55 ee58cd23eb18

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின்அங்கத்தவர்கள் இருவர் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினை  இடைநிறுத்தி 05 பேர் கொன்ட , புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் கூட்டுறவு  அபிவிருத்தி உதவி ஆணையாளர்ரினால் நியமனம் செய்தமைக்கு எதிராக சங்க அங்கத்தவர்களால் கடந்த 05.01.2021 ம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பின் 08 ம் திகதி   முழு அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்த போதிலும் அதற்கு தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் 

42ca24f3 b9df 49c5 8c4c 21011e1f8278

புதிதாக நியமிக்கப்பட்ட 05 பேர் கொண்ட இயக்குனர் சபையை இரத்து செய்ய வேண்டும் 
தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இயங்கு நிலையில் உள்ள   நிர்வாகத்ததை செயற்பட அனுமதிக்குமாறும்  கிளைக்குழு தேர்தலை நடாத்தி புதிய நிர்வாத்தை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரு அங்கத்தவர்கள்  இன்று (17-01-2021) 07வது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . 

da0eb968 8578 4e82 952f 2dd2c254a924

 
  சின்னப்பொடியன் புலேந்திரன்.மாணிக்கம் தவராசா ஆகிய இரு அங்கத்தவர்களே  இவ்வாறு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  அவரது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க கோரி இன்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்று திரண்டு அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர் இதே வேளை இவர்களை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு வருகின்ற போதும் இது வரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என ஏனைய அங்கத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்