ஆராட்சி பணி வெளிப்படைத்தன்மையாக இருக்கவேண்டும்- நா.உ சாள்ஸ்!

Screenshot 20200129 225530 Gmail
Screenshot 20200129 225530 Gmail

குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். நேற்றைய தினம் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு இன்றையதினம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார் .

உங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் 2021.01.18 அன்று அகழ்வு பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைகப்பட்டதுடன் தாங்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டீர்கள். அதன்போது இந்துக்கடவுளின் அடையாளங்கள் அழிக்கபட்டு இருந்ததுடன் அகழ்வு பணியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ் பிராந்திய தொல்பொருள் ஆராய்சி திணைகளத்தின் ஆராட்சி உதியோகத்தர்கலையோ உள்வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

ஆராட்சி பணி வெளிப்படைத்தன்மையாக இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன். எனவே யாழ் பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும் யாழ் பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராட்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக்கொள்ளும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சம்மந்தபட்ட அமைச்சருடனும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருடனும் தொலைபேசியில் உரையாடினார். இது தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர்களையும் இணைத்துகொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.