வயோதிபர் ஒருவரை உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய மல்லாவி காவல்துறையினர்!

022
022

மல்லாவி காவல்துறையினர் வயோதிபர் ஒருவரை நிர்வாணமாக்கி விட்டு உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரிய வருவதாவது,

கடந்த 15-01-2021 அன்று கோட்டைக்கட்டியகுளம் பகுதியில் வயலுக்கு சென்ற சமயம் கட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கராஜா சுஜீவன் எனும் குடும்பஸ்தர் படுகாயமுற, அவருடன் வயலுக்கு சென்ற ராமச்சந்திரன் (வயது-60) எனும் நபர் படுகாயமுற்ற குடும்பஸ்தரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் தங்கியிருந்த வேளை , அன்று இரவே 8 மணியளவில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டுக்கு சென்ற மல்லாவி காவல்துறையினர் குறித்த நபரை விசாரணைக்கென மல்லாவி காவல்துறை நிலையத்திற்க்கு ஏற்றி சென்று அடைதுள்ளனர்.

சித்திரவதைகளின் பின்னர் குறித்தநபரை நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் நீதவான் இவருக்கு பிணை வழங்கியுள்ளார். காவல்துறை சித்திரவதைகளின் பின்னர் இவரின் மனைவி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற சம்பவங்களை ராமச்சந்திரன் தெரிவிக்கையில்,

காவல் நிலைய சிறைக்கூடத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்த வேளை இரவு 10 மணியளவில் என் சிறைக்கூடாரத்திற்கு வந்த காவல்துறை காவலர் என்னை வெளியில் வருமாறு அழைத்தார். பின்னர் ஒரு அறை ஒன்றுக்குள் என்னை அழைத்து சென்றனர் , அதற்குள் ஏற்கனவே 7,8 காவல்துறையினர் இருந்தனர்.
அவர்களுடன் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் அமர்ந்திருந்தார்

என்னை உட்காருமாறு கூறிவிட்டு நீதானே கட்டுத்துவக்கு வைத்தனி என்று எனது இடுப்பு பகுதியில் ஒரு கொட்டனால் அடித்தார் ஒரு காவல்துறை காவலர் அதன் பிற்பாடு மிக்சி( அரைக்கும் இயந்திரப்பொறி) ஒன்றுக்குள் கொச்சி மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தார் . என்னை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டு என் கண்ணுக்குள் அரைத்த மிளகாய் தூளினை விட்டனர். இரவு ஒருமணியளவில் மீண்டும் என் கண்ணுக்குள் தூள் விட்டனர் ,பின்னர் என்னை முழு நிர்வாணம் ஆக்கிவிட்டு என் ஆணுடம்பு எங்கேயும் கொச்சி மிளகாய் தடவினார்கள் அதன் பிற்பாடு எனக்கு என்ன நடந்த என்று தெரியாது என் முதுகு மற்றும் பின் பகுதிகள் எங்கும் கண்டல் காயங்கள் பின்னரே என்னை நீதவான் முன்னிலையில் பாரப்படுத்தினர், அங்கு கூட என்னை கதைக்கவோ எனக்கு அடித்தார்கள் என்ற விடயத்தை தெரிவிக்கவோ காவல்துறையினரால் அனுமதிக்கப்படவில்லை, என்று கண்ணீருடன் தெரிவித்தார்