உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க வேண்டும்- ஜனாதிபதி

.jpg
.jpg

உலகளாவிய மாற்றத்திற்கு ஏற்றவாறு நாட்டை விரைவாக மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான நிலைமைகளுக்கு ஏற்ற கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களால் அவதானம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமானதொரு பகுதியாக இது காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு தனியார் துறைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பட்டதாரிகளுக்கு உரிய தொழிநுட்ப அறிவை வழங்குவது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்கள் எந்த துறையினராக இருந்தாலும் தொழிநுட்பம் சார்ந்த விடயங்களும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்