2009 ம் ஆண்டு காணமல் போனவர்களுடன் அந்த விடையம் நின்று விடவில்லை அது 2019 வரைக்கும் தொடர்ந்தது- கமலதாஸ்!

DSC 0169
DSC 0169

2009 ம் ஆண்டு காணமல் போனவர்களுடன் அந்த விடையம் நின்று விடவில்லை. அது 2019 வரைக்கும் தொடர்ந்தது. நபர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுள்ளனர். என கருணா அம்மானின் தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் செயலாளர் வி. கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தகாலத்தில் மட்டுமல்ல போராளிகளின் உறவுகள் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவ்வாறு குற்றம் சாட்டப்பட்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கின்றனர் என சர்வதேச ஆய்வுகளும் இலங்கை அரசினுடைய உண்மை கண்டறியும் ஆணைக்குழுவின் பல விபரங்களும் ஜ.நா சபை வரை அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன் மீது சில நடவடிக்கைகளை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது அதன் பங்காளியாக இலங்கை அரசு மாறியிருந்தது அதனை ஏற்றுக் கொண்டிருந்தது ஆனால் ஒரு அரசு போனதும் மற்ற அரசு வந்ததும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் அவர்கள் சில முரண்போக்குடன் செயற்படுததை காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்களைப் பொறுத்தளவில் 2009 ம் ஆண்டு காணமல் போனவர்களுடன் அந்த விடையம் நின்றுவிடவில்லை அதற்கு பின்னர் 2019 வரைக்கும் தொடர்ந்து நபர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணைக்காக கொண்டு செல்லப்படுவதும் சட்ட உதவிகள் இல்லாமலும் மேலதிகமாக உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

சிறையில் அடைக்கப்படுகின்றவர்கள் குற்றம் சாட்டபட்டிருக்கலாம் தண்டனை வழங்கியிருக்கலாம் எனவே அவர்கள் இந்த நாட்டின் பிரைஜைகள் என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகள் என்பதையும் விட ஒரு நல்நம்பிக்கையை கட்டியொழுப்பும் நோக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயலாளர் பிரசாந்தனை சிறைக்கு மீண்டும் கொண்டு சென்றதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு சட்டரீதியான ஏற்பாடுகளை நல்லிணக்கத்தை காட்டி விடுவிக்கலாம். ஏன் என்றால் பல குற்றங்கள் சாட்டப்பட்ட பல பெரும் சிங்கள இராணுவ தளபதிகளுக்கு உயர்பதவிகள் வழங்கி மக்களுடைய வரிப்பணத்திலே பல கடமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல தமிழ் போராளிகளுக்கும் அவர்கள் எந்த பிரிவாக இருக்கலாம் அவர்கள் சீர்திருந்தி வந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அரசியல் அல்லது சிவில் கடமைகளை புரிவதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும், இழப்புக்களுக்கான நிவாரணம் வழங்கப்படவேண்டும். காணாமல்போனவர்கள் வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான தேவைகள் அவர்களின் குடும்பத்துக்கான தேவைகள் நிலைநாட்டப்பட வேண்டும். ஏன் என்றால் இது ஒருகுடியரசு ஒவ்வொரு வாக்காளரும் இந்த நாட்டினுடைய மன்னர் இந்த நாட்டின் அரசர் ஆகவே இது சீனா போன்ற ஒரு கம்மினியூஸ்ட் அரசியல் கட்சி தன்னுடைய படையாட்களை கொண்டு கைப்பற்றிய இராணுவ ஆட்சி அல்ல இது ஒரு ஜனநாயக ஆட்சி.

ஆனால் இப்போது இந்த அரசாங்கத்திலே சிங்கள போர் வீரர்களுக்கு பங்களிப்பு இருக்கின்றது. அவர்களுடைய நிர்வாகத்துக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் தமிழ் போராளிகளுக்கு அரசை நடத்துவதற்கான சந்தர்ப்பம் புறக்கணிக்கப்படுகின்றது ஆகவே இங்கு இனவாத கண்ணோட்டமே தெரிகின்றது. இதற்காக நாங்கள் கவலை கொள்கிறேன்

தற்போழுது தொல்பொருள் என்ற இந்த அராஜக போக்கினை இந்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பிரதிநிதிகளையோ மாவட்ட செயலாளாரையோ கலந்து பேசாமல் அந்த முன்னெடுப்பை அரச பணத்தை செலவிடுவதை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கின்றது அப்படியான அவசரமான தேவை இல்லை.

எங்களுடைய நாடு நிதி தேவைக்கு தள்ளாடுகின்ற நேரத்திலே இந்த புதைந்துபோன விடயங்களை தோண்டுவதற்கு பணத்தையும் தொழிலாளர்கள் அரச உத்தியோகத்தர்களை வீண்விரையம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான தீய உள்நோக்கமுடைய விடையமாகும் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆனால் இந்த அரசை கண்டிப்பதில் அர்த்தமில்லை அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள ஒர் அரசாங்கம் எனவே நாங்கள் சிங்கள சிவில் சமூக தலைவர்களை அழைத்து வந்து எல்லைக் கிராமங்களுக்கு கொண்டு சென்று இந்த நில அபகரிப்பை தாங்களக அறிந்து கொள் ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது கால்நடை வளர்ப்பாளர்கள் , விவசாயிகள், மீள்குடியேறியமக்கள், வறிய மக்கள், படுகின்ற துன்பங்களை நிலவரங்களை
பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் சேர்ந்து விஞ்ஞானரீதியாக பகுப்பாய்வு செய்வதற்கு உதவிகளை செய்து வருகின்றோம். உண்மையை வெளிப்படுத்துகின்றோம் அதனூடாக அரசில்வாதிகளுக்கு நல்ல அழுத்தம் பிரயோகிக்கின்ற செயற்பாடுகளை செய்துவருகின்றோம்.

இனவாத போக்குடன் நாங்கள் செயற்பட விரும்பவில்லை எல்லோருடைய கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் உள்வாங்கிய நிலையில் அரச திணைக்களங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றோம் என்றார்.