இம்ரான் கானுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ரத்து!

bigstock Cancelled Stamp 11015717
bigstock Cancelled Stamp 11015717

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு, பாதுகாப்பு நிமித்தங்கள் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சித் திட்டம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை.

இலங்கை – பாகிஸ்தான் ராஜதந்திர குழுவினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்று அமைச்சர் கூறியுள்ளார்.