அரசாங்கத்தின் கருத்துக்கு தர்க்கரீதியாக பதிலளிக்க எதிர்க்கட்சி தயார்- நா. உ ஹர்ஷ டி சில்வா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 28T192702.669
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 28T192702.669

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக இந்நாட்டு எரிவாயு விலை அதிகரிக்கக்கூடும் என அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த கருத்துக்கு தர்க்கரீதியாக பதிலளிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் சிக்கியுள்ளதால் நமது எரிவாயு விலை அதிகரிக்கக்கூடும் என எமது அரசியல்வாதிகள் கூறுகின்றனர். பல வருடங்களாக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார். எரிவாயு விலை அதிகரிக்கப்படாவிட்டால் நாம் திவாலாகிவிடுவோம் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பொருட்களின் விலையை அதிகரிக்க அல்லது குறைக்க அரசியல்வாதிகள் தலையிடுவது மோசமானது. சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பல் காரணமாக எரிவாயு விலையை அதிகரிப்பதாக கூறி கேலி செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.