அரச பெருந்தோட்டங்களில் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – இராமலிங்கம் சந்திரசேகரன்

photo
photo

அரச பெருந்தோட்டங்களில் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியாத ஒரு துர்பாக்கிய நிலையே தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆயிரம் ரூபாவுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இன்றும் சிலர் 1000 ரூபாவுக்கு வேட்டு வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஆயிரம் ரூபா அதிகரிப்பை அரசாங்கம் முதலில் அரச தோட்டங்களில் வழங்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களும் இன்று மன விரகத்தியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்