எந்த ஒரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயார் – ரோஹன லக்ஸ்மன் பியதாச

Rohana Lakshman 850x460 acf cropped
Rohana Lakshman 850x460 acf cropped

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அதன் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச நேற்று (04) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.

எவ்வாறாயினும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது.

இதற்காக உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

எனினும், குறித்த உடன்படிக்கை தற்போது மீறப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.