சிங்கள அரசிடம் பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்ட கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள்

90a76b93 8878 4284 b967 8a222ac710a4
90a76b93 8878 4284 b967 8a222ac710a4

பன்னாட்டு அரங்கில் ஒவ்வொரு முறையும் கொலையாழிகளை தப்பவைத்துக்கொண்டு  சிங்கள நாடாளுமன்றில் மட்டும் சர்வதேச விசாரணையென வீரவசனம் கூறிகொண்டு மறு புறத்தில் முள்ளிவாக்கால் தூபி இடிப்பு விடயத்தை ஆவணப்படுத்துமாறு ஐ.நாவுக்கு கடிதம் எழுதும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுபு;பினர்கள் ரணில் மைத்திரி அரசிடம் இருந்து பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்டனர் -என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

698a9ffd 2d37 45d9 9015 ba1f507f7cad


நேற்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச  விசாரணையை மூடி மறைத்து ரணில் அரசுக்கு முண்டு கொடுத்துகொண்டு கொலைகார ஆட்சியை கொண்டு வந்து தூபியை இடிக்கவிட்டுப்போட்டு தூபி இடிப்பு தொடர்பில் ஐ.நாவுக்கு போலிக் கடிதம் எழுதி மறுபடியும் மக்களை ஏமாற்றியது கூட்டமைப்பு.

IMG 5293

சிறிலங்கா அரசு தமிழின உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்துக்கொண்டு காலம் காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள் உச்சக்கட்டமாக 2009 முள்ளிவாய்க்காலில் சிறுவர்கள், கர்ப்பிணிப் தாய்மார்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டும் நூற்றுகணக்கில் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், இளைஞர்கள், யுவதிகள் என ஆயிரக்கணக்கானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும்,ஆயிரக்கணக்கில் அங்கவீனர்களாகப்பட்டும்,சுமார் ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படு மோசமாக இனவழிப்பு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தமிழர்களின் உரிமைப் போராட்டம் சிங்கள பேரினவாத அரசினால் 2009இல் தமிழின அழிப்பு யுத்தம் மூலம்  மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு சர்வதேச நீதிக்கான போராட்டத்தினை அடக்கியொடுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாது அவற்றுக்கு எதிராகவும், கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஜனநாயக வழிமுறைகளில் சிறிலங்கா அரசின்  திட்டமிட்ட(கொவிட்-19) உள்ளிட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் தாண்டி வட கிழக்கில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். 

698a9ffd 2d37 45d9 9015 ba1f507f7cad 1

இவ்வாறு எமது அமைப்பு ரீதியாக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களின் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் எட்டிய போதும் ஒவ்வொரு ஐ.நா அமர்விலும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் நாம் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டோம்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,அரசின் முகவர்களுக்கும் வாக்கழிக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் நாம் எமது உறவுகளை பல ஆண்டுகளாக தேடி தேடி அலைந்து நோய்வாய்ப்பட்டு மரணித்துக்கொண்டு வருகின்றோம் நீதிக்கான சாட்சியங்கள் சாவுக்குள் நித்தமும் முடங்கி வருகின்றன உண்மையில் எங்கள் பரிதாப நிலையை முடிவு காண ஒவ்வொரு தமிழ் உறவுகளும் விழிப்படைய வேண்டும் .

2009 கூட்டு இன அழிப்புக்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவிக்கும் வடிவத்தில் கொலையாழிகளை நீதிபதிகளாக்கும் பன்னாட்டு சமூகத்தின் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 19/02,தீர்மானத்தையும்  மற்றும் மார்ச் 2013  ,மார்ச் 2014  தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும் தீர்மானங்கள் 30/01 ஒக்டோபர் 2015, 34/01 மார்ச் 2017 மற்றும் 40/01 மார்ச் 2019 ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் கூட்டமைப்பின் ஆதரவோடு இணை அனுசரணை வழங்கியது.

IMG 5210

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் ,பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இல்லாமல் கூட்டமைப்பால் கால அவகாசங்கள் வழங்கப்பட்டும்  எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நீதிக்கான செயன்முறைகளில் எந்தவித முன்னேற்றம் இல்லாது  தொடர்ந்தும் தமிழ் மக்களின் கலாச்சார,பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டும்,தமிழ் தேசியம் முற்றாக சிதைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி தீர்மானம் நிறைவேறி வருகின்றது.

எனவே  கடந்தகால சம்பவங்களையும் ,நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ  அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்தும், ரணில் அரசின் முகவர்களான சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, நோத் மசடோனியா,மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர்-குழு நாடுகளின் தூதுவர்களை கொழும்பில் மூடிய அறைக்குள் மூடிப்பேசியதன் பின்னரே 46/1 கால நீடிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

7212fd92 58da 46e8 ba88 2ea20745b5d4

இலங்கை அரசை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை என்பதை பல ஆண்டுகளாக நாம் நன்கு உணர்ந்துள்ளோம் இந்த யதாரத்த உண்மையை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும்
கூட்டமைப்பின் செயற்பாட்டால் இன அழிப்பு தொடர்கின்றன தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வட கிழக்கில் திட்டமிட்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர் யார் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார்  ரணில் அரசுக்கு முண்டு கொடுத்து கொலைகார அரசை மேடையேற்றியவர்கள்?

கூட்டமைப்பினர் சிங்கள நாடாளுமன்றில் வீர வசன முழக்கங்களை முழங்கி சர்வதேச விசாரணை என உசுப்பேத்தியது போதும் இனியும் மக்கள் இவர்களுக்கு பின்னால் சென்று ஏமாந்தது போதும்.முழக்கங்கள் யாவும் சிங்கள அரசை வேறு வடிவத்தில் திருத்திப்படுத்துவதற்கும், தங்கள் கதிரைகளை தக்கவைப்பதற்கான காய் நகர்த்தல்களாகும்
சர்வதேச விசாரணைக்கான சட்டரீதியான ஆவணங்களை காணவில்லை,சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது,பொய்யான பரப்புரைகளை கூறிக்கொண்டு தமிழ் தேசியத்தை அடியோடு அழிக்கும் செயல்களை செய்துகொண்டு தமிழரை படுகொலை செய்த சிங்கள சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்த கடமைப்பட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு வீடுவீடாக பொய் பிரச்சாரம் செய்து மக்களை வாக்களிக்க வைத்த ஒவ்வொரு நபர்களும் தாங்கள் விட்ட தவறுகளுக்கு தங்கள் கன்னங்களில் ஓங்கி அறைய வேண்டும்
இவ்வாறான கட்டங்களில், ஆர்வக்கோளாறு வேலைகளில் சிக்காமல்,சலுகைகளுக்கு விலை போகாமல்  சூழலைப் புரிந்து கொண்டு, அவதானமாக அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தமிழ் மக்களின் பொறுப்பாகும் என அந்த அறிக்கையில் வேண்டுகோல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது