மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய இடமளிக்கக்கூடாது – ஜனாதிபதி

194063791 1925850680913571 382866754412970429 n
194063791 1925850680913571 382866754412970429 n

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்றும், சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் நிலையங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, ஆளுநர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.