அனைவரும் பொருட்கள் வாங்கலாம் – தமிழக்குரலால் சதொசவில் ஏற்பட்ட மாற்றம்!

77777777777
77777777777

கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் அரச ஊழியர்கள் மட்டும் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என்ற விதி மாற்றப்பட்டு அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

நேற்றைய தினம் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் அரச ஊழியர்கள் மட்டும் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என்ற புதுவிதி முகாமையாளரால் கொண்டுவரப்பட்டு, ஏனையவர்களுக்கு பொருட்கள் மறுக்கப்பட்டன.

இந்த அநீதிக்கு எதிராக கிளிநொச்சியை சேர்ந்த ஏனைய ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அச்சம் காரணமாக ஒதுங்கி இருந்தபோதிலும், தமிழ்க்குரல் இவ்விடயத்தில் தலையிட்டிருந்தது.

சதொச முகாமையாளர் இராணுவத்தினர்மூலம் கைது செய்வோம் என்று அச்சுறுத்தியபோதிலும் இது தவறு என்பதை தமிழ்க்குரல் துணிவுடன் சுட்டிக்காட்டியதுடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு முறைப்பாடுகளை செய்திருந்தது.

இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்க்குரல் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

தொடர்புபட்ட செய்தி