விவசாய உரங்கள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படும் – சஷீந்திர ராஜபக்ச

images 2 1
images 2 1

விவசாயத்திற்கு தேவையான அனைத்து உரங்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இத்துறையின் நிபுணர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்நாட்டு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரங்களை, நமது நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்க முடியும் என்றார்.

மேலும், கரிம உற்பத்திக்கு தேவையான பின்னணியையும் அரசாங்கம் தயார் செய்து தரவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.