ரணிலுடன் எவருமே இணையமாட்டார்கள்! – சஜித் அணி திட்டவட்டம்

download 14
download 14

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

சஜித் அணியில் உள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் எனவும், நாடாளுமன்றம் வரவுள்ள ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு நகர்வை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த நிலைப்பாட்டை அக்கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.