ஆவி பிடித்த பின்பே பி.சி.ஆர் பரிசோதனை – ஆடைத் தொழிற்சாலையில் அடாவடி

Garment 2 700x375 1
Garment 2 700x375 1

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்ற ஊழியர்களுக்கு நேற்றைய தினம்(16) பி.சி.ஆர் பரிசோதனைக்கு முன்பு ஆவி பிடிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார ஊழியர்கள் உணவருந்த சென்றதற்கு பின்னர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் நடவடிக்கைக்கு முன்னர் 150 ஊழியர்களுக்கு மேற்பட்டோருக்கு ஆவி பிடித்தகாவும் சுகாதார ஊழியர்கள் மீண்டும் வந்த பிறகு ஆவி பிடிக்க வேண்டாம் என்று நிர்வாகம் சொன்னதாகவும் குறித்த ஊழியர் தெரிவித்தார்.

மேலும் ஆவி பிடிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை செய்வதால் கொரோனா தொற்றை கண்டறிய முடியாதெனவும் இதனால் குழந்தைகளை வைத்திருக்கின்ற தாய்மார்கள் உட்பட ஊழியர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறித்த ஊழியர் கேட்டு கொண்டுள்ளார்.

ஆடை தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மிகுந்த வேதனையளிப்பதாக சமூக  ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்