சுற்றுச்சூழலை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் இடமாக முன்பள்ளிகள் மாற்றப்பட வேண்டும் – மஹிந்த

75fae6a423a4109d816a43271ef3e3e2 XL
75fae6a423a4109d816a43271ef3e3e2 XL

முன்பள்ளிகளை, போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல், அவற்றில் குழந்தைகள் சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் ‘குரு அபிமானி’ தேசிய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, குழந்தைகளுக்கான அடித்தளம் முன்பள்ளிகளிலேயே ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

முன்பள்ளியில்தான் குழந்தைகள் முறையான பாடசாலை கல்விக்கு வழிநடத்தப்படுகின்றனர்.

இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு உலகைப் பார்ப்பதற்கான முதல் அடித்தளம் முன்பள்ளியில் இடப்படுகின்றது.

இந்த நிலையில், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப முன்பள்ளிகளை இயக்குவதற்கான வழிமுறையையும் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் இணைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.