கொரோனாவை காரணம் காட்டி அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கிறது – கித்சிறி மஞ்சநாயக்க

1236589
1236589

கொவிட்டை காரணம் காட்டி அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது நாடு மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது.

அத்துடன் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் மரணங்களும் அதிகரித்து இருக்கின்றன. அதேபோன்று நாட்டின் பொருளாதாரமும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருகின்றது.

கொவிட்டை காரணம் காட்டி அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றது . அதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

அத்துடன் நாட்டின் எதிர்க்கட்சியும் அரசாங்கத்துக்கு முறையான அழுத்தங்களை காெடுப்பதற்கு தவறி இருக்கின்றது. அதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் வருவதை எதிர்க்கட்சி தங்களுக்கு பெரும் சக்தியாகவே பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.