கொவிட் கட்டுப்பாட்டு செயலணி தோல்வி: நாடு இராணுவ மயமாகிறது – ரணில்

010010 1
010010 1

கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தோல்வி அடைந்துள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட அவர் இன்று நாடாளுமன்றில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து அவர் நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அரசாங்கம் தமது பொறுப்பை கொவிட் செயலணியிடம் பாரப்படுத்தி இருக்கிறது என்று கூறினார். இதன் மூலம் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என்று பல உயர் துறைகள் இருக்கின்ற நிலையில். இராணுவத் தளபதிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாடு இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது. இது வருத்தமளிக்கிறது. இந்த விடயத்தில் ஏனையவர்களும் தமது கருத்தை ஏற்றுக் கொள்வர் என்று நம்புகிறேன்.

தேவை என்றால் இந்த விடயம் தொடர்பாக விவாதம் ஒன்றுக்குக் கோரிக்கை விடுக்கிறேன். நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அதன் ஒத்துழைப்பைப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று கூறினார்.