பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

1542176543 Vadivel Suresh 2 1
1542176543 Vadivel Suresh 2 1

நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நாடாளுமன்றில் விசேட பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மலையக பகுதிகளில் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளவர்கள் தொடர்பிலான விபரங்களை திரட்டுவதற்கு ஒரு முகாமைத்துவ கண்காணிப்பு குழுவொன்றும் நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.