அரசாங்கம் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது – மனுஷ நாணயக்கார

download 9
download 9

அரசாங்கம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் விவகாரத்தில் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது.

நாட்டிற்கு 200 – 300 ரூபா விலையில் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் கொண்டுவரப்படுகின்ற போதிலும், இங்கு அப்பரிசோதனைக்காக சுமார் 2000 ரூபா அறவிடப்படுகின்றது. இதில் தொடர்புபட்டிருப்பவர்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது, அரசாங்கம் தமக்கு நெருக்கமானவர்கள் இலாபமீட்டுவதற்காகக் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பது தெளிவாகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.