தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

thanimai
thanimai

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ருவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19  தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.