சிறைச்சாலைகளுக்கு சென்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன் – லொஹான் ரத்வத்தே!

21 614530d1073a5
21 614530d1073a5

தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே

அநுராதபுரம் மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளுக்கு சென்றமை தொடர்பில் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் மனோ கணேசன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதிகளிடம் கேட்டறிய இவர்கள் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.