அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் – ஜகத் குமார

Unknown
Unknown

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிமட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளை ஒரு சில அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை பிரயோகித்து தாக்குவது வெறுக்கத்தக்க விடயமாகும்.

தற்போதும் இந்நிலையே காணப்படுகிறது.மக்களின் பிரச்சினைகளையும், ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டும் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அரசாங்கத்தையும்,கட்சியையும் சரத் வீரசேகர நெருக்கடிக்குள்ளாக்கினார்.

இப்பிரச்சினைகள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளேன். விரைவில் சிறந்த தீர்மானம் கிடைக்கப் பெறும் என்றார்.