அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் – மஹிந்த அமரவீர

அமரவீர 720x380 1
அமரவீர 720x380 1

நாட்டில் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது இப்போது தவறுகளை திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்புக்கு அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களை கடுமையாக பாதித்துள்ளமை உண்மையே, எந்த காரணம் கூறியும் இதனை அரசாங்கமாக எம்மால் நிராகரிக்க முடியாது.

ஆனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி நிலைமையை நாடு எதிர்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கமாக நாம் விட்டுள்ள தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து, சுய கணிப்பை செய்துகொண்டு உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டிய விடயங்களை கவனம் செலுத்தி மக்கள் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த மூன்று ஆண்டுகளில் எமது அரசாங்கத்தை மக்களே விரட்டியடித்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.