பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி

103580776 srilanka maithiripalasirisena
103580776 srilanka maithiripalasirisena

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், தனது அரசியல் வாழ்க்கையில் சோகமான நிகழ்வு இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலே என்றும் குறிப்பிட்டார்.

இது மிகவும் சிக்கலான பிரச்சினை என சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தன்னால் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.