விவசாயிகளின் பிரச்சினை அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டது – ரோஹித அபேகுணவர்தன

rohitha abe gunawardana
rohitha abe gunawardana

விவசாயிகளின் பிரச்சினை தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சில் நேற்று ( 19 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நாடகத்தை போன்று விவசாயிகளின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மாற்றமடைகிறது.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஒரு தரப்பினர் விவசாயிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிறுபோக விவசாயத்தில் சேதன பசளையை பயன்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்ற விவசாயிகள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.விவசாய நடவடிக்கையில் ஈடுப்படாமல் சேதன பசளை பயன்தராது என்று குறிப்பிட்டுக் கொண்டு போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.எக்காரணிகளுக்காகவும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படமாட்டாது.

மேலும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை திறக்கப்படவுள்ளன.அர்ப்பணிப்புடன் ஆசிரியர் சேவையில் ஈடுப்படும் ஆசிரியர்கள்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.